Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபலம்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை உடல் நல குறைவால் காலமானார். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் தரவில்லை.

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன்கள் கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது வைரமுத்து கருணாநிதி வைக்கப்பட்ட கண்ணாடி பேழையின் மீது தன் உடலை சாய்த்து கதறி அழுதார். அவரை மிகவும் அதிகமாக நேசித்தவர் வைரமுத்து என்பது குறிப்பிட தக்கது.