Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் கோலமாவு கோகிலா வெளியாகாததற்கு இதுதான் காரணமா? மறைமுகமாக ஈடுபட்டுள்ள முன்னணி ஹீரோ

தன்னுடைய நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். தெளிவாக சொல்ல போனால் அந்த மாதிரி முதலில் நடிக்க ஆரம்பித்ததே இவர்தான்.

அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கோலமாவு கோகிலா. அனிருத்தின் கல்யாண வயசு பாடலால் இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விஸ்வரூபம்-2 உடன் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த மாற்றத்திற்கு நடிகர் கமலஹாசனும் ஒரு காரணம் என கோலிவுட்டில் ஒரு பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படம் வெளிவந்தால் எனது படம் சரியான வசூலை பெறாது என இவர்தான் கோலமாவு கோகிலாவை தயாரிக்கும் லைகாவிடம் பேசினார் என கூறப்படுகிறது.

இது உண்மையா? இல்லையா? என்பதை கமல் தான் சொல்ல வேண்டும்.