Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்

ஒவ்வொரு காலக்கட்டத்திலையும் சூப்பர் ஸ்டார் ஸ்டேஜில் ஒருவர் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டேஜுக்கு கிட்டதட்ட நெருங்கி வந்திருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களாக தரும் அவருக்கு தினந்தினம் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த படம் மெர்சல். இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான இந்த படம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக சீனாவில் ரிலீஸாகவுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் MERSAL STORM IN CHINA SOON என்ற ஹாஸ்டேக்கை பிரபலபடுத்தி வருகின்றனர்.

இதற்குமுன் அதாவது ரஜினியின் முத்து படம் எப்படி ஜப்பானில் முதல்முறையாக ரிலீஸாகி ஆச்சிரியப்படுத்தியதோ அதே போலதான் மெர்சல் தற்போது அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாகி வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது.