Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழனை பார்த்தால் உங்களுக்கு எப்படியிருக்கு, மிஷ்கினை வறுத்தெடுத்த ஆதித்யா புகழ் கதிர்

மிஷ்கின் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ஆள். ஆனால், அதற்காக மேடை என்று கூட பாராமல் இஷ்டத்திற்கு யாரை பற்றியாவது பேசிவிட்டு சென்றுவிடுவார்.

அப்படித்தான் சமீபத்தில் பேரன்பு இசை வெளியீட்டு விழாவில் மம்முட்டியை புகழ்கிறேன் என்று நினைத்துக்கொண்டு தமிழ் நடிகர்களை இழிவாக பேசினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் ஆதித்யா டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கதிர் ஒரு இசை வெளியீட்டு விழாவில் மிகவும் கோபமாக பேசியுள்ளார்.

இதில் ‘மிஷ்கின் தமிழர்களை இழிவாக பேசுகிறார், எங்களை பார்த்தால் அவருக்கு எப்படியிருக்கின்றது. தமிழ் நடிகர்கள் எத்தனையோ பேர் திறமையானர்கள் உள்ளனர்.

அவர்கள் தான் இவர் கண்களுக்கு தெரியவில்லையா?’ என்று கோபமாக பேசியுள்ளார்.