Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தும் விஜய்யும் தான் என்னை இந்த மாதிரி ஆக்குனாங்க! பிரபல இயக்குனரின் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் இருபெரும் தூண்களாக இருப்பவர்கள் தான் அஜித்தும் விஜய்யும். அவர்கள் என்னவோ பக்கத்து பக்கத்து தூண்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த ரசிகர்கள் தான் அவர்களை எதிரிகளாக பாவித்து கொள்கின்றனர்

இந்நிலையில் இவர்கள் இருவரையும் இயக்கியிருக்கும் இயக்குனர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் சமீபத்திய பேட்டியில் இவர்களை பற்றி கூறியுள்ளார். அதில், ‘இவர்கள் இருவரும் தான் எனக்கு கவனிக்கதக்க இயக்குனர் என்ற ஒரு அடையாளத்தை தந்தனர்.

அஜித்தை வைத்து கீரிடம் விஜய்யை வைத்து தலைவா போன்ற படங்களுக்கு பின்பு தான் இந்த சினிமா இண்டஸ்ட்ரீயில் நான் எடுத்த படங்கள் வெளியே தெரிந்தது, அதனால் இவர்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.

மேலும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இவர்களுடன் பணியாற்ற ஆவலாக உள்ளேன் எனவும் கூறினார்.