Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்காக தனது படிப்பு, வாழ்க்கை கனவு என அனைத்தையும் தூசியென விட்டு வந்துள்ள பிரபலம்! ஏன் இப்படி

சூர்யா நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த படம் தான் 7ஆம் அறிவு. தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலித்திருந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய அஜய் ஞானமுத்து தான் நாளை ரிலீஸாக உள்ள இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர். இவர் இந்த 7ஆம் அறிவோடு தனது சினிமாவை முடித்து கொண்டு மேல் படிப்பிற்காக லண்டன் செல்ல இருந்தாராம்.

ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கவுள்ள செய்தியை கேட்டு தனது படிப்பு, வாழ்க்கை என இது நாள் வரை கண்ட கனவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மறுபடியும் ARMயிடம் உதவி இயக்குனராக சேர்ந்தாராம்.

அந்த படப்பிடிப்பு நடந்த அந்த 90 நாட்கள் தான் அவரது வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள் என தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.