Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்-2விற்குள் நுழைய இருக்கும் முதல் சீசனின் போட்டியாளர்! அவரது மனைவி சொன்ன தகவல்

பிக்பாஸ் தமிழின் 2வது சீசன் பயங்கர பாப்புலர் நிகழ்ச்சியாக தற்போது உள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இதில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த எலிமினேஷனிலும் பிரபல சீரியல் தொடரில் நடித்து கொண்டிருந்த விஜயலட்சுமி வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி ஆனார். அதன் பின் சில பிரபலங்களின் பெயர்களும் எண்ட்ரி லிஸ்ட்டில் அடிப்பட்டது.

தற்போது முதல் சீசனில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராமும் உள்ளே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று அவரது மனைவியும் சீரியல் நடிகையுமான நிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கணேஷ் உள்ள செல்ல நேர்தால், நீங்கள் அவரை அனுமதிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் அனுமதிப்பேன், ஆனால் அவர்தான் செல்லமாட்டார். அவர் உள்ளே இருப்பவர்களைவிட மிகவும் அமைதியானவர். உள்ளே உள்ளவர்கள் அனைவரும் short temperedஆக உள்ளனர் என்றார்.