Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலாஜிக்கு ஒரு நியாயம் ஐஸ்வர்யாவுக்கு ஒரு நியாயமா? பிக்பாஸை வறுத்தெடுத்த முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி

ஜூன் மாதன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 75 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இதில் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு தற்போது பாதிக்கு பாதியாக 8 பேர் தான் உள்ளனர்.

இன்னும் 25 நாட்களே தான் உள்ளதால் கடுமையான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து வருகிறது. மொட்டை போடுவது, முடி வெட்டுவது, இப்போது புதிதாக டாட்டூ குத்துவது என்று போட்டியாளர்களை கொடுமைப்படுத்தி வருகிறது.

ஆனால் இதிலெல்லாம் பிக்பாஸ் சமநிலையை கடைப்பிடிக்கவில்லை என பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்த்தி தற்போது பிக்பாஸ் மீது தனது வெறுப்பை கொட்டியுள்ளார்.

பாலாஜிக்கு மட்டும் மொட்டை போட அங்கேயே இருக்கும் மும்தாஜாம், ஆனால் ஐஸ்வர்யாவோட முடியை வெட்ட வெளியில் இருந்து ஆள் வருவாங்கலாம், இதெல்லாம் என்ன நியாயம் பிக்பாஸ் என ஆர்த்தி செம கோபமாகியுள்ளார்.