Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டியால் வந்த வினை! மொட்டையடிக்க நான் தயார் - பிரபல நடிகர் அதிரடி

நடிகர் சங்க விசயங்கள் தற்போது பெரிதளவில் பேசப்படுகிறது. தெலுங்கு சினிமா நடிகர் ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சைகளை தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

தற்போது நடிகர் சங்கத்தில் பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தலைவராக இருக்கும் மூத்த நடிகரான சிவாஜி ராஜா மீது செயலாளர் நரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக அமெரிக்காவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் கணக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை. வேண்டியவர்களுக்கே நிகழ்ச்சி ஏற்பாடு ஒப்பந்தகள் கொடுத்து முறைகேடு நடந்துள்ளது.

அரசு அதிகாரிகள் திரையுலகினரை வைத்து விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கோபமான சிவாஜி எந்த முறைகேடும் நடக்கவில்லை.

தவறு நடந்திருந்தால் என் மொத்த சொத்துக்களை கொடுக்க தயார். மொட்டையும் அடித்துக்கொள்வேன். விரைவில் தேர்தல் வரவுள்ளதால் என்னை போட்டியிட விடாமல் தடுக்க இப்படியெல்லாம் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.