Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுராக் காஷ்யுபிற்கு மிகவும் பிடித்த மற்றும் பாதித்த தமிழ் படங்கள் இது தானாம்

அனுராக் காஷ்யுப் ஹிந்தி திரையுலகில் மிகவும் தரமான படங்களாக எடுத்து வருபவர். பாக்ஸ் ஆபிஸ் தாண்டி தனக்கு பிடித்த படங்களை தொடர்ந்து எடுத்து வருகின்றார்.

இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார், இவரிடம் சமீபத்தில் உங்களுக்கு பிடித்த தமிழ் படங்கள், உங்களை பாதித்த தமிழ் படங்கள் எது என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அனுராக் ‘நான் நிறைய தமிழ் படங்கள் பார்த்துள்ளேன், இதில் என்னை மிகவும் பாதித்தது, பாலாவின் சேது, பாலாஜி சக்திவேலின் காதல், செல்வராகவனின் துள்ளுவதோ இளமை ஆகிய படங்கள் தான்.

இதை தாண்டி மைனா, அங்காடித்தெரு, நான் கடவுள், பரதேசி, ஆரண்ய காண்டம் என பல படங்கள் எனக்கு பேவரட்’ என்று கூறியுள்ளார்.