பல ஹிட் படங்கள் கொடுத்த தமிழ் இயக்குனர் கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம் - அதிர்ச்சி தகவல்

பிரபலம் by John Andrews

படம் வெற்றியோ தோல்வியோ அது நடிகர்களை விட மிக அதிகமாக சினிமா தயாரிப்பாளர்களைத்தான் அதிகம் பாதிக்கும். படம் தோல்வியடைந்து மொத்த சொத்தையும் இழந்த பலர் உள்ளனர்.

தற்போது பூந்தோட்ட காவல்காரன் உட்பட பல ஹிட் படங்கள் இயக்கியவரும் தயாரிப்பாளருமான செந்தில்நாதன் தற்போது வீட்டில் இருந்து வெளியேறி காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார் என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

2009-ல் உன்னை நான் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் அவர். அதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது, படமும் திரைக்கு வரவில்லை. பின்னர் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார்.

சில டிவி தொடர்களை இயக்கியும் நடித்தும் வந்தார். சமீபத்தில் ஒரு தொடரில் இருந்து அவரை நீக்கிவிட்டனர். இதனால் விரக்தியான அவர் வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் பிச்சை எடுத்து வருகிறாராம்.

இது பற்றி அறிந்த மற்ற தயாரிப்பாளர்கள் அவரை கண்டுபிடிக்க முயன்று வருகிறார்களாம். போனில் பேசும்போது தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளது மேலும் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது. அதனால் அவர் எதுவும் விபரீத முடிவு எடுக்கும்முன் கண்டுபிடிக்க போலீஸ் உதவியுடன் தேடல் நடந்துவருகிறது.