Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 பட டீஸர் வரும் நேரத்தில் இயக்குனர் ஷங்கரின் சோகமான பதிவு

இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது ரஜினியின் 2.0. படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ முடிந்துவிட்டது, ஆனால் VFX காட்சிகளின் வேலைகளால் பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

பட வேலைகள் இறுதி கட்டத்தில் வந்திருப்பதாக தெரிகிறது, ஒரு வழியாக பட டீஸரை நாளை வெளியிட உள்ளனர். அதோடு இந்த டீஸரை ஸ்பெஷலாக 3D கண்ணாடிகள் அணிந்து பார்க்க வேண்டியது முக்கியம், இதற்காக டீஸர் வெளியிடப்படும் திரையரங்குகளையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

டீஸர் வெளியாக இருக்கும் நேரத்தில் இயக்குனர் ஷங்கர் ஒரு சோகமான பதிவை டுவிட்டரில் போட்டுள்ளார். அதில், தெலுங்கானாவில் பேருந்து விபத்தால் இறந்த 57 பேரின் மரண செய்தி சோகத்தை அளித்துள்ளது. அவர்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.