Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலைக்கு முயன்ற முன்னணி நடிகையின் சகோதரி - அதிர்ச்சி தகவல்

சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் என்றால் அழுத்தம் அதிகமாக தான் இருக்கும். பல பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் அதிகம் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் அக்கா ஷாஹீன் பட் 12 வயது இருக்கும்போது தற்கொலைக்கு முயன்றார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

முன்னணி இயக்குனர் மகேஷ் பட்டின் மகள்கள் தான் ஆலியா பட், ஷாஹீன் பட்.

ஷாஹீன் பட் இளம் வயதில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 12-13 வயது இருக்கும் போது பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தாராம்.