Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்பால் சர்ச்சையான ட்விட்டை நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்த சந்தோஷ் சிவன்

ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தயாரிப்பாளர்களை கிண்டல் செய்யும் வகையில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.

தயாரிப்பாளர்கள் டெக்னிசியன்களுக்கு சம்பளம் தரும் போது முகம் சுளிப்பதாகவும், ஆனால் ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது மட்டும் அனந்தமாக கொடுப்பதாக கூறும் ஒரு மீம் அவர் பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் JSK சதிஷ். "கலையை நேசிக்க தெரியாத பணவெறி பிடித்த உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம்.நீ யாரை சொல்கிறாய் உனக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா லிங்குசாமியையா மன்னிப்பு கேள் இல்லையென்றால் உன்னை கலைத்தாய் உணரச்செய்யும்" என JSK சதிஷ் ட்விட்டியிருந்தார்.

இதனால் சந்தோஷ் சிவன் தான் பதிவிட்ட ட்விட்டை அவர் நீக்கிவிட்டார். அதில் அவர் 'சில தயாரிப்பாளர்களுக்கு வருத்தம் தெரிவித்ததால் இதை நீக்குகிறேன்" என அவர் கூறியுள்ளார்.