Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே பாட்டில் கோபமான கங்கை அமரனை வாயடைத்த இளையராஜா! சுவாரஸ்ய சம்பவம்

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவையே இத்தனை வருடம் இசையால் கட்டி வைத்தவர் இளையராஜா. இவர் உண்மையில் இசைஞானி மட்டுமல்ல பேச்சிலும் நக்கல் மிகுந்தவர் என்பது இவரின் பேட்டிகளில், மேடைகளில் பேசும் போதும் தெரியும்.

இதுபற்றி நிருபீக்கும் வண்ணம் வைரமுத்து ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். படிக்காதவன் படத்தில் வரும் ஒரு கூட்டு கிளியாக பாடலை வைரமுத்து எழுதி இளையராஜா இசையமைத்து கொண்டிருந்தார்.

அப்போது ராஜாவின் தம்பி கங்கை அமரன் ஸ்டுடியோவுக்குள் வந்துள்ளார். அவருக்கு அண்ணனிடம் ஏதோ ஒரு விஷயத்தை நீண்ட நாட்களாக கேட்டு ராஜா அதை கொண்டுகொள்ளவில்லை என்ற கோபத்துடன் இருந்தார்.

இதனால் நான் எழுதிய பாடலை பார்த்து அதில் இரண்டு வரியை கட்டம் போட்டு ராஜாவிடம் தள்ளினார். அதில் என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் என்று இருந்தது.

இதை பார்த்து கோபமான இளையராஜா வேறு இரண்டு வரியை கட்டம்போட்டு கங்கை அமரனிடம் தள்ளினார். அதில் நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா, வியர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா என்று இருந்தது.

ஒரே பாட்டிலேயே தம்பியின் பாணியிலேயே அவரின் வாயை அடைத்துவிட்டாராம்.