Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட தகவல் வரவில்லை ஆனால் டிரண்டிங்கில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- விஷயம் இதுதான்

கடந்த சில நாட்களாக டுவிட்டரில் தமிழ் சினிமா பற்றிய விஷயங்கள் நிறைய அதிகம் டிரண்டிங்கில் உள்ளனர். அப்படி இன்றும் சில விஷயங்கள் டிரண்டாகி வருகிறது. அதில் இளைய தளபதி விஜய் ரசிகர்களின் பங்கும் உள்ளது.

அவர்கள் இயக்குனர் அட்லீ பிறந்தநாளை விஜய்க்கு செய்வது போல் #HBDMersalAtlee என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து விஜய்யை இயக்கி வெற்றி கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். சர்கார் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லீயுடன் தான் இணைய இருக்கிறார்.

அப்படி தெறி, மெர்சலை விட படு மாஸாக இருக்கும் என்று அட்லீ சமீபத்திய பேட்டிகளில் கூறி வருகிறார்.