Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளரை அடியாள் வைத்து அடித்த நிறுவன உரிமையாளர்- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன். இவர் சூது கவ்வும், இன்று நேற்று நாளை, இறைவி, காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

படங்களை தயாரிப்பது தாண்டி மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் என நடத்தி வருகிறார். அண்மையில் கூட MVK என்ற மருத்துசமனையை சரியாக வங்கி மூலமாக பணம் செலுத்தி வாங்கியிருக்கிறார். ஆனாலும் மருத்துவமனையின் ஆவணங்களை இதுவரை நிர்வாகம் செய்து வந்த பாரதி மோகன் தர மறுத்துள்ளார்.

இந்த நேரத்தில் அபினேஷின் அப்பா DR.டி. இளங்கோவன் சில அடியாட்களால் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார், அவர் தலை, கை, கால்கள் போன்ற இடங்களில் அடியாம், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய அப்பாவிற்கு ஏற்பட்ட இந்த விபத்திற்கு பாரதி மோகன் தான் காரணம் அவர் மீது போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபினேஷ் பேட்டியளித்துள்ளார்.