Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தான் சூப்பர் ஹீரோ சர்கார் பட நடிகை புகழாரம்! தளபதி பற்றி என்ன சொல்லியுள்ளார் தெரியுமா?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் பல துணை நடிகைகள் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் அபிதா. யார் இவர் என்று கேட்டால் ஏசியன் பெயிண்ட் விளம்பரத்தில் நடித்திருப்பாரே அவர் தான்.

சர்காரில் விஜய்யுடனேயே தனது முழு பயணத்தையும் மேற்கொண்டுள்ள இவர் பயங்கர வெறித்தனமான அஜித் ரசிகை. இப்படி ஒரு படம் முழுக்க விஜய்யுடன் நடித்திருந்தாலும் தல அஜித் தாங்க மாஸ் ஹீரோ என தனது முடிவை மாற்றாமல் தான் தற்போதும் உள்ளார்.

இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அவர், அஜித்தின் ரசிகை என்பதை தாண்டி தலயை ஒரு மனிதராக எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படிங்க அவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தாலும் கார் ரேஸ், பைக் ரேஸ்ஸில் கலக்கிட்டு, இப்போ கூட காலேஜ் பசங்க கூட சாதனை, அதுவும் முதுகில் அவ்ளோ பெரிய சிகிச்சைக்கு அப்புறம் இப்படி என்றால் அவர் சூப்பர் ஹீரோ தாங்க.

விஜய்யை மாஸ் அந்த மாதிரியான டைப்பில் பிடிக்கும், அப்புறம் இந்த படத்தில் நடிச்சதுக்கு பிறகு அவரையும் ஒரு மனிதராக பிடிக்க ஆரம்பித்திருக்கு என்றார்.