Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த விஜய் போல இந்த விஜய்க்கும் வந்த பிரச்சனை! இவ்வளவு விசயம் நடந்திருக்கிறதா

விஜய் என்றாலே தமிழ் சினிமாவில் மாஸ் தான். அவருக்கு இளையதளபதியிலிருந்து தளபதியாக போன படத்திலே புரமோஷன் கொடுத்துவிட்டார்கள்.

தற்போது அந்த இளையதளபதி டைடிலுக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அந்த விஜய் படத்திற்கு வந்த பிரச்சனை போல இப்போது இந்த விஜய் படத்திற்கும் வந்துள்ளது.

இவர் தமிழில் தற்போது நோட்டா படம் மூலம் அறிமுகமாகிறார். அரசியலை மையப்படுத்தி வரும் இப்படம் அக்டோபர் 5 ல் தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழில் தணிக்கை குழு U/A சான்றிதழை கொடுத்துள்ளது.

ஆனால் தெலுங்கில் தணிக்கை குழு சில காட்சிகளை நீக்க சொல்லியும், சில வசனங்களை MUTE செய்ய சொல்லியும் வற்புறுத்தினார்கள். படக்குழு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்டவில்லையாம்.

கட்டாயப்படுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் படக்குழு அதை நீக்கிய பின்னரே தணிக்கை குழு U/A சான்றிதழை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தை வெளியிட தடை கேட்டு சிலர் வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.

மேலும் அண்மையில் ஹைதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஜய் இப்படம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததல்ல. படத்தில் தவறாக எதுவும் இல்லை. ஆனால் படம் மக்களை சிறந்த ஆட்சியை தேர்ந்தெடுக்கவைக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.