Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயி சொல்வது அனைத்தும் பொய்யா? இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியுள்ள முக்கிய தகவல்

கவிஞர் வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்தாக பாடகி சின்மயி குற்றச்சாட்டு வைத்துள்ளார். சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு இசை விழாவில் பாட சின்மயி சென்ற போது இப்படி நடந்ததாக நேற்று அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் அளித்துள்ள பேட்டியில் சின்மயிக்கு எதிராக பேசியுள்ளார்.

"தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளி மீது குற்றம்சாட்டும் சின்மயி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர். சின்மயி,அவரது தாயார் என்னுடைய இல்லத்தில்தான் தங்கினார்கள்" என அவர் கூறியுள்ளார்.