Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடகி சின்மயிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சினிமா பிரபலங்கள்! விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் சர்ச்சை

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட்டான விசயம் சின்மயி சொல்லி வரும் பாலியல் சர்ச்சைகளே. கடந்த திங்கள் கிழமை முதல் இதுகுறித்த அடுத்தடுத்த பதிவுகள் இடம் பெற்று வருகிறது.

இதில் கவிஞர் வைரமுத்து சிக்கியுள்ளார். இந்நிலையில் சின்மயிக்கு ஒரு புறம் ஆதரவுகளும் பெருகி வருகிறது. தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் என பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

நடிகை ஸ்ரீரெட்டி "ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் துர்க்கை, காளி, பைரவி, சக்தி, பார்வதி என இருக்கிறார்கள். சின்மயியின் தைரியத்தை எல்லோரும் பாராட்ட வேண்டும்" என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சித்தார்த் "வைரமுத்து மீது சில பெண்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இவர் இப்படித்தான் என உடனே யாரையும் முடிவு செய்துவிடமுடியாது. சம்மந்தப்பட்டவர்களின் கருத்தையும் கேட்ட வேண்டும்.

மேலும் சின்மயி உடைய வலியும், கோபமும் பெரிதாக தெரிகிறது. என்ன நடந்தது என வெளிக்கொண்டு வரவேண்டும்" என கூறியுள்ளார்.

அத்துடன் பிரகாஷ் ராஜ் கூறும் போது "இது மாதிரியான தொற்று நோய் எல்லோர் வாழ்கையிலும் ஏற்படக்கூடியது. பெண்ணுடைய பலம் மிகப்பெரியது. நீங்கள் அதை சரியாக கையாண்டுள்ளீர்கள்.

உங்கள் பணி தொடரட்டும்" என கூறியுள்ளார்.