Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் சர்ச்சையில் பிக்பாஸ் வைஷ்ணவி துணிச்சலாக எடுத்த எதிர்பாராத அதிரடி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த மாதம் முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. செய்யும் தொழிலுக்கேற்ற படி இந்த நிகழ்ச்சியிலும் மூச்சு விடாமல் தொடர்ந்து பேசிவந்ததை நீங்களும் பார்த்து வந்திருப்பீர்கள். ரசிகர்கள் மத்தியிலும் இவர் மீது சில அதிருப்தி இருந்தது.

சில வாரங்களிலேயே பின் இவர் வெளியேறினார். இந்நிலையில் தற்போது அவர் சின்மயிக்கு ஆதரவாக இறங்கியுள்ளார். பிரபல பாடகி சின்மயி தற்போது பல பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இதில் வைரமுத்துவும் சிக்கியுள்ளார். இதை மட்டுமல்ல இன்னும் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகிறார்கள். அதற்கும் வைஷ்ணவி ட்வீட் செய்துள்ளார்.