Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு படங்களுக்கு அனிருத் செட்டாக மாட்டார்- பிரபல இயக்குனரின் பரபரப்பு பேட்டி

தமிழில் why this kolaveri பாடலின் மூலம் அறிமுகமானவர் அனிருத். இவரை தனுஷ் தான் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதன் பின் தனது கடின உழைப்பாலேயே அவர் இந்த உயர்ந்த இடத்தில் நீடித்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தமிழில் முன்னணியில் இருக்கும் இவர் போன வருடம் தான் த்ரிவிக்ரமின் அஞ்ஞாதவாசி படத்தின் மூலம் தெலுங்குக்கு அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

ஆனாலும் த்ரிவிக்ரம் தனது அடுத்த படத்திலும் அனிருத்தை சேர்த்தார். பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அனிருத்தை கழட்டிவிட்டு தமனை சேர்த்தார். படம் நேற்று வெளியான நிலையில் அனிருத்தை கழட்டிவிட்டதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அனிருத் இந்த படத்தின் பூஜைகளில் எல்லாம் கலந்து கொண்டார். ஆனால் அவர் இந்த படத்திற்கு சரியான தேர்வு அல்ல என நினைத்தேன். அதை பற்றி அவரிடமே பேசினேன். அவர் இன்னும் தெலுங்கு பட இசையை புரிந்து கொள்ளவில்லை. அதற்கு சில காலம் ஆகும் என்றார்.