Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடவுளையே குறை சொல்வார்கள், என் கணவரை சொல்ல மாட்டார்களா? - பாலியல் சர்ச்சைக்கு விளக்கம்

கடந்த சில நாட்களாக #மீடூ என்ற பெயரில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் பல்வேறு பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது தெரிவித்த குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் T-சீரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பூஷன் குமார் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்விட்டரில் அவர் மீது பெயர் சொல்ல விரும்பாத சிலர் பாலியல் கூறியுள்ளனர். அதற்கு பூஷன் குமார் மறுப்பு தெரிவித்ததோடு போலீசில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பூஷன் குமாரின் மனைவி திவ்யா குமார், "கடவுள் கிரிஷ்னரையே சில மக்கள் எதிர்த்தார்கள். இந்த சமுதாயத்தை சுத்தப்படுத்த துவங்கப்பட்ட மீடூ தற்போது சிலரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. என் கணவருடன் நான் எப்போதும் இருக்கிறேன். அவர் மீது எந்த ஆதாரமும் இல்லாத தவறான குற்றச்சாட்டு பகிரப்படுவது துரதிர்ஷ்டவசமானது" என அவர் கூறியுள்ளார்.