Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்து காப்பியா? முன்னணி இசையமைப்பாளர் குற்றச்சாட்டு

தமிழ் மட்டுமில்லாமல் ஹாலிவுட் அளவில் இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா போன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர்.

இவரது இசையில் தான் 2.0, சர்கார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வர இருக்கின்றன. இந்நிலையில் இவர் மீது மற்றொரு இசையமைப்பாளரான தமன் குற்றச்சாட்டும் விதத்தில் பேட்டி அளித்துள்ளார்.

தமனின் இசையமையில் தற்சமயம் வெளிவந்த அரவிந்த சமேதா என்ற தெலுங்கு படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமன் மீது, உங்கள் பாடல் எல்லாம் காப்பியாக தான் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த தமன் இந்த கேள்வியை எல்லாம் உங்களால் ஏ.ஆர்.ரகுமானிடமோ அல்லது கீரவாணியிடமோ கேட்க முடியுமா என கொந்தளித்தார்.