Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் கதை சர்ச்சை பற்றி இயக்குனர் பேரரசு அதிரடி கருத்து

விஜய் நடிப்பில் இரண்டு படங்களை இயக்கியவர் பேரரசு. எப்போதும் மாஸ் கமர்சியல் படங்களை இயக்கும் அவர் நேற்று தொரட்டி என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் மேடையில் பேசும்போது சர்கார் கதை திருட்டு சர்ச்சை பற்றி பேசியுள்ளார்.

"இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் வக்கீலாக இருக்க வேண்டியுள்ளது. தயாரிப்பாளர் மட்டுமில்லை இயக்குனரும் வக்கீலாக இருக்க வேண்டியுள்ளது. என் கதை, உன் கதை என பிரச்சனை வருகிறது. வக்கீலுக்கு காசு கொடுக்க முடியாது. நம்மளே வக்கீல் ஆகி வாதாட வேண்டியதுதான்" என அவர் கூறியுள்ளார்.