Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் என் மகன் தான்! பிரபல நடிகை கொடுத்த அதிரடி

சினிமா பிரபலங்கள் எப்போதும் தங்கள் பேட்டிகளில் பேசும் போது ஸ்டார் ஹீரோக்களை பற்றி ஒரு சில வார்த்தைகளாவது சொல்லிவிடுவார்கள்.

சில சீனியர் நடிகைகளும் நடிகர்களும் கூட பாரபட்சமின்றி நிச்சயம் தங்கள் அன்பை பகிர்ந்துகொள்வார்கள். தற்போது பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணனும் அப்படித்தான்.

அவர் பிரபல் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் என்னை தேவதையாக நடத்தியவர் என் மகன் அஜித். நம்மையே அவர் கொண்டாடுவார் என்றும் சொல்லலாம்.

கைகூப்பி வணக்கம் சொல்லி நம்மை அழைத்துகொண்டு போவதோடு நாம் பேசுவதை பவ்யமாக கேட்பார். இப்படியாக அவர் செய்யும் விசயங்கள் என்னை மிகவும் நெளியவைத்தது.

இருக்கட்டும் என சொன்னால் கேட்கமாட்டார். பிரியாணி சமைக்கும் விசயத்தில் அவரும் நானும் ஒரே மாதிரி தான். இருவருக்கும் டேஸ்ட் நன்றாக வரும்.

ஆனால் அவர் பரிமாறியதை நான் சாப்பிட்டிருக்கிறேன். நான் பரிமாற அவர் சாப்பிடும் தருணம் இன்னும் வரவில்லை. வெள்ளைக்கார ஹீரோவை அவர் அருகில் நிற்க வைத்தால் கூட அஜித் தான் அழகு என்று சொல்வேன் என கூறியுள்ளார்.