Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படம் ரிலீஸ் என்று சந்தோஷப்பட்டால் அதற்குள் வெடித்த புதிய பிரச்சனை- விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி?

விஜய்யின் சினிமா வரலாற்றில் அவரது படங்களுக்கு சமீபகாலமாக ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் படம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்ததும் இது என்னுடைய கதை என்று ஒருவர் பிரச்சனைக்கு வர இறுதியில் அது சமரசமாக முடிந்தது.

இப்போது அடுத்து ஒரு புதிய பிரச்சனை, அதாவது முருகதாஸ்-விஜய் கூட்டணியில் தயாரான கத்தி படத்தின் கதை என்னுடையது என்று நீதி கேட்டு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதோடு விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் இப்படியொரு பிரச்சனை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எங்கே இவரும் நீதிமன்றம் என சென்று சர்கார் ரிலீசுக்கு பிரச்சனை வர வைத்துவிடுவாரோ என்றும் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.