Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசத்திற்கு பிறகு சிவா இந்த தமிழ் நடிகரை வைத்து தான் இயக்கவுள்ளாராம்!

இயக்குனர் சிவா தற்சமயம் தல அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் யாரை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது தான் கோலிவுட்டில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சிவா அடுத்ததாக தமிழை விட்டு தெலுங்கிற்கு சென்று அல்லு அர்ஜூனை வைத்து இயக்கவுள்ளார் என்றார்கள். அதற்கும் ஒரு படி மேல் சென்று சூர்யா தான் அடுத்த படத்தின் ஹீரோ என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் சிவாவின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது சிவகார்த்திகேயன் தானாம். மேலும் சன்பிக்சர்ஸ் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.

சீமராஜாவில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் தற்சமயம் நடித்து வருகிறார்.

மேலும் இந்த அறிவிப்பு ஓரளவுக்கு உண்மை போல தான் தெரிகிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின்பே இதற்கு தெளிவான தீர்வு கிடைக்கும்.