Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை2 கிடையாதாம்! வெற்றிமாறன் எடுத்த அதிர்ச்சிகர முடிவு

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என வித்தியாசமாக தனக்கே உரிய பாணியில் படம் எடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தை இயக்குவதற்கு முன்பே வடசென்னை மூன்று பாகங்களாக வெளிவரும் என கூறியிருந்தார். ஆனால் முதல் பாகம் வெளிவந்துவிட்ட நிலையில் இரண்டாம் பாகம் தற்போதைக்கு கிடையாதாம்.

அதற்கு முன்பாக ராஜன் வகையறா என்ற வெப் சீரியஸை எடுக்க உள்ளாராம். வடசென்னையில் அமீர் நடித்த ராஜன் கேரக்டரை சிறு வயதில் இருந்து இன்னும் அழுத்தமாக இந்த வெப் சீரியஸில் சொல்ல உள்ளாராம்.

இது முடிந்த பின்பே வடசென்னை-2வை பற்றி யோசிப்பாராம்.