Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் ஏன் போட்டோ எடுத்தோமோ என நினைத்தேன்! பிரபல வில்லனின் அதிர்ச்சிகரமான பேட்டி

கோலிவுட்டின் தல என்றால் அது எப்போதும் அஜித்குமார் தான். அவரது நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஸ்டண்ட் மாஸ்டரும் வில்லனுமான தீனா சமீபத்தில் அஜித்தை சந்தித்ததை பற்றி பேட்டியளித்துள்ளார்.

அதில், ஒருநாள் அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டேன், அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் அந்நேரம் எங்களை ரசிகர்கள் சுற்றி வளைத்தனர். என்னுடன் போட்டோ எடுக்க தயாரானவர், அவர்களுடன் போட்டோ எடுக்க மறுத்தால் கோபித்து கொள்ள போகிறார்கள் என்று 3 மணிநேரம் நின்று அங்கிருந்த 300 பேருடனும் போட்டோ எடுத்து அனுப்பினார்.

ஒரு அரை மணிநேரம் நின்றாலே கால்களில் வலி எடுக்க கூடியவருக்கு 3 மணி நேரம் நிற்கும் வேலையை தந்துவிட்டேனே என்று அன்றிரவு முழுவதும் போட்டோ எடுத்திருந்தாலும் கஷ்டமாக இருந்தது என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், திறமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் மேலே தூக்கி விட்டுவிடுவார் எனவும் கூறினார்.