Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க சொன்ன அரசு - அதிரடி பதில் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய் நடித்திருந்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. படம் படப்பிடிப்பு ஆரம்பத்ததில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தது.

படம் வெளியான பின்பும் கூட அந்த நிலை தொடர்ந்தது. படத்தில் இருந்த அரசின் இலவச பொருட்களை எரிக்கும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் முருகதாஸுக்கு அரசிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு தற்போது பதில் அளித்துள்ள முருகதாஸ், அரசின் நலத்திட்டங்களை விமர்சித்தற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் இனி வரும் படங்களில் அரசை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்கமுடியாது என்று கடுமையாக கூறியுள்ளார்.

இதனால் இவர் மீது போலீஸ் புகார் பாயக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.