Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் என்ன சொன்னார் தெரியுமா? ரசிகர்கள் ஆரவாரம்

2.0 இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ரசிகர்களோடு ரசிகர்களாக கார்த்திக் சுப்புராஜ் 2.0 படத்தை பார்த்து ரசித்தார்.

படத்தை பார்த்து முடித்த பிறகு அவரிடம் படம் குறித்து கேட்கையில் ‘அட கொலை வெறிங்க, வெறித்தனம் பண்ணிட்டார் தலைவர்.

ஷங்கர் சார் எல்லாம் தெய்வம்ங்க’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார், மேலும், பேட்ட படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருவதாகவும் ரசிகர்கள் முன்பே கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது மட்டுமின்றி அவர் பல ரஜினி படங்களையும் ரசிகர்களோடு தான் பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது, பேட்டையும் அப்படியே பார்ப்பார் என்று எதிர்ப்பார்ப்போம்.