Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, விக்ரம், விஷால், ஜெயம் ரவி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபலத்திற்கு மிக உயரிய விருது!

தமிழ் சினிமாவில் வசனங்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அப்படியாக சில எழுத்தாளர்கள் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளனர்.

சூப்பர் ரஜினியின் படங்களில் முக்கியமான ஒன்று பாபா. இதில் வசனம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டம் மால்லாங்கிணறை சேர்ந்த இவர் கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி எழுதிய சஞ்சாரம் என்ற நாவலை எழுதியுள்ளார்.

இதற்காக அவருக்கு இந்த வருடத்திற்கான இந்திய அரசின் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விஷால் நடித்த சண்டகோழி, அவன் இவன், சண்டகோழி 2, விக்ரம் நடித்த பீமா, ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்திற்கு வசனம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.