Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா பிரபலங்களை கவர்ந்த புரட்சி போராளி! மரணம் ? உண்மை நிலை என்ன

விவசாயத்திற்காக இயற்கை முறையில் பல நெல் ரகங்களை உற்பத்தி செய்து புரட்சி செய்தவர் நெல் ஜெயராமன். கடந்த ஒன்றரை வருடமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதியுதவி அளித்து வந்தனர்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி, சூரி, சத்யராஜ் ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில் இயற்கை விவசாயி என சிறப்பு பெற்ற அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்திகள் சுற்றிவந்தது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.