Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கூட மோதலா.. வெளியே போங்க மொதல்ல.. : மேடையிலேயே கூறிய பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் வசூலை வாரிகுவிக்கும் ஒரு சில நடிகர்களில் விஜய் முக்கியமானவர். அவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வந்தது. அது தற்போது வரை 250 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி சமீபத்தில் 'பெட்டிக்கடை' என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசும்போது அந்த படத்தின் இயக்குனர்+தயாரிப்பாளர் கார்வண்ணனை சமுத்திரக்கனி கலாய்த்தார்.

ஒரு நாள் வந்து சமுத்திரக்கனியிடம் 'சர்காருடன் படத்தை ரிலீஸ் செய்யலாம் என நினைக்கிறேன்' என கூறினாராம் இயக்குனர். "போங்க.. வெளியே போங்க மொதல்ல.." என சமுத்திரக்கனி அவரை அனுப்பி வைத்தாராம்.

"நமக்குன்னு ஒரு தேதி கிடைக்கும்.. அப்போ பொறுமையா பண்ணிக்கலாம் போங்க" என மேலும் அவரிடம் சொன்னாராம்.