Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்காரை வைத்து அனிருத்தை கலாய்த்து தள்ளிய பிரபலம்! வைரலாகும் மீம்

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவரது இசையில் அடுத்ததாக ரஜினியின் பேட்ட படம் வெளிவர உள்ளது.

இதன் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அனிருத்துடன் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்புரமணியமும் பாடியுள்ள இப்பாடலில் எஸ்.பி.பி.க்கு அதிக வரிகள் இல்லை.

இது சமூக வலைத்தளங்களில் பலரது கண்டத்திற்கு அனிருத்தை உள்ளாக்கியது. இந்நிலையில் இதனை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் பிரபல வசனத்தின் மூலம் கலாய்த்து மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் அனிருத்தின் ரசிகர்கள் செம்ம கோபத்தில் கங்கை அமரனை வறுத்தெடுத்து வருகின்றனர்.