Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தில் அஜித், நயன்தாராவின் காதல் காட்சிகள் இப்படி தான் இருந்தது- டான்ஸ் மாஸ்டர் சொன்ன தகவல்

விஸ்வாசம் படம் வருகிற பொங்கலுக்கு அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த பிருந்தா மாஸ்டர் இப்படத்தில் அஜித், நயன்தாராவின் காதல் காட்சிகளை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், சிவா என்னிடம் இப்படத்தின் கதையை சொல்லும்போதே எனக்கு பிடித்தது. நயன்தாராவுக்கு வலுவான கதாபாத்திரம். சும்மா 2 பாடலுக்கு நடனமாடிவிட்டு மட்டும் செல்வதுபோல் இல்லாமல் மிகவும் வலுவான கதாபாத்திரம். அஜித் சாருக்கும் வலுவான கதாபாத்திரம் தான்.

நான் இதில் ஒரு க்ரூப் பாடலுக்கு நடனம் அமைத்தேன். அதில் அஜித்தும் நயன்தாராவும் தங்களது கேரக்டர்களை இன்னும் உயர்த்துவதற்காக போட்டிபோட்டு நடித்திருந்தார்கள். அவர்களது நடிப்பை பற்றி நான் சொல்லிதான் தெரிய போவதில்லை என்றார்.