Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கு சிவாவை இவ்வளவு பிடித்திருப்பதற்கு இதுதான் காரணம்! யார் சொன்னது பாருங்க

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் பொங்கலுக்கு ரஜினியின் பேட்டயுடன் வெளியாக உள்ளது.

விஸ்வாசம் படம் அஜித்தும் சிவாவும் இணையும் நாலாவது படம். அஜித்தை இதுவரை எந்த இயக்குனருடனும் இவ்வளவு க்ளோஸாக பழகியது இல்லை. இதற்கான காரணத்தை இப்படத்தின் பாடாலாசிரியர் விவேகா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், சிவாவுடன் சிறுத்தை படத்தில் இருந்து பணியாற்றி வருகிறேன். சிவா ரொம்ப நல்ல மனிதர். அவரை அனைவருக்கும் பிடிக்கும். சிறுத்தை படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை அப்படியே உள்ளார். அதனால் தான் அஜித் சாருக்கு அவரை பிடித்துள்ளது.

மேலும் பாடல்கள் எழுதுவதில் முழு சுதந்திரம் அளிப்பார் சிவா. அவருக்கு தமிழ் மீது பற்று அதிகம் என கூறினார்.