Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஷ்டமர் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய் குறித்து விக்னேஷ் சிவன் சொன்ன கருத்தை பாருங்க- பாராட்டு குவிகின்றது

விக்னேஷ் சிவன் ரசிகர்கள் அனைவராலும் அன்பான இயக்குனர் என்று அழைக்கப்படுபவர். இவர் இயக்கத்தில் இந்த வருடம் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வந்தது.

இவர் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளார், இந்நிலையில் இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலானது.

இதில் ஒரு டெலிவரி பாய் கஷ்டமருக்காக கொண்டு சென்ற உணவை அவரே எடுத்து சாப்பிட்டார். அப்போது யாரோ வீடியோ எடுத்து அதை வெளியிட்டனர்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, விக்னேஷ் சிவன் ’பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை, அவரை மன்னித்து விடுங்கள்’ என்று அவர் கூறியது எல்லோரிடமும் பாராட்டை பெற்று வருகின்றது.