Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாச ஓபனிங் வேட்டி கட்டு பாடலில் இத்தனை சிறப்பு இருக்கா? படத்தின் டான்ஸ் மாஸ்டரே சொன்ன தகவல்

ரஜினியின் பேட்டயுடன் மோத உள்ளது அஜித்தின் விஸ்வாசம். சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதனால் இப்படம் வெளிவந்ததும் பல சாதனைகளை படைக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய அசோக் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், இந்த விஸ்வாசம் படம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதை விட மேலாக இருக்கும். அதிலும் குறிப்பாக படத்தின் ஓபனிங் வேட்டி கட்டு பாடலில் 200 டான்ஸர்கள் ஒர்க் பண்ணிருக்காங்க, 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒர்க் பண்ணிருக்காங்க, 80 குழந்தைகள் டான்ஸ் ஆடியிருக்காங்க.

பயங்கரமான லொக்கேஷனாக தேர்வு செய்து ஒரு பத்துநாள் இந்த பாடலுக்காக ஷூட்டிங் நடத்திருக்கோம், தியேட்டரில் பார்க்கும்போது உங்களுக்கு ரொம்ப ஷாக்காக இருக்கும். ஜெமினி ஓ... பாடலை போல விஸ்வாசத்தின் இந்த வேட்டி கட்டு பாடல் எனக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை வாங்கி தரும் என்றார்.