Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடிச்சி தூக்கு, வேட்டி கட்டை விட இந்த பாடல் தான் விஸ்வாசத்தில் பிரபலமாகும்! விவேகாவின் ஓப்பனான பேச்சு

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. டி.இமான் இசையில் விவேகாவின் வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

இதுவரை யுடியூப்பில் 7M பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு அடுத்த படியாக ஓப்பனிங் வேட்டி கட்டு பாடல் தான் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த இரு பாடல்களை விட இந்த படத்தில் மெலோடி பாடல் ஒன்று உள்ளது அது தான் செம்ம ஹிட்டடிக்கும் என்று சமீபத்திய பேட்டியில் விவேகா கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், டி.இமானின் ஸ்பேஷலே அவரது ரொமண்டிக் பாடல்கள் தான். சூப்பரான மெலோடி பாடல் ஒன்று இந்த விஸ்வாசம் படத்திலும் உள்ளது. மற்ற பாடல்கள் எல்லாத்தையும் விட இந்த பாடல் தான் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றார்.