Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு இத்தனை கோடியாம்! அந்த பணம் யாருக்கு தெரியுமா

உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர் இசைஞானி இளையராஜா. 1000 படங்களை கடந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இதனை வருகிறது ஃபிப்ரவரி 2, 3 தேதிகளில் தயாரிப்பாளர் சங்கம் நடத்துகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொள்ள விஜயகாந்த், ரஜினி, கமல், விக்ரம், ஜெயம் ரவி, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ. 10 கோடி பணத்தை திரட்டி, அதனை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.