Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலுக்கும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்துக்கும் தொடர்பு? பிரபல தயாரிப்பாளர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

தயாரிப்பாளர் சங்க பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பூட்டப்பட்ட தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தை பூட்டை உடைத்து திறக்க முயன்ற விஷால் போலீசால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் விஷால் மீது பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் "விஷால் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார் என கூறப்படுகிறது. சிலர் அவருக்கு தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்துடன் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அனைத்து படங்களையும் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் இணையத்தில் லீக் செய்து சினிமா துறைக்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ்ராக்கர்ஸ்."

"மேலும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் படங்களை கன்னடத்தில் டப் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் விஷால் KGF என்ற கன்னட படத்தை தமிழில் டப் செய்து அவரே வெளியிடுகிறார்" என கூறியுள்ளார்.