Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இக்கட்டான நேரத்தில் விஷாலை கவலையில் ஆழ்த்திய பிரபலத்தின் மரணம்! கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் இரங்கல்

விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் பிரச்சனையை சந்தித்து கைதாகி பின் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர தீர்ப்பும் அவருக்கு சாதகமாகிவிட்டது.

இந்நிலையில் அவரை தற்போது எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணம் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இலக்கியத்தில் பணியாற்றிய அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் புதுச்சேரியில் காலமாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் வருத்தம் தெரிவித்ததோடு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டரில் வானம் வசப்பட்ட திரு.பிரபஞ்சனுக்கு பூமி வசதிப்படாததால் காலமானார். அவர் எழுத்துக்கள் எப்போதும் நம்முடன். நன்றி சொல்வோம் என கூறியுள்ளார்.