Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் கொடுக்கும் அதிரடி! அவசர ஏற்பாடு - சூடு பிடிக்கும் தயாரிப்பாளர் சங்க விவகாரம்

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக செயல்பட்டு வரும் விஷால் அண்மையில் போலிசாரால் கைது செய்யப்பட்டது பின் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக சிலர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இந்த விசயத்தில் நீதிமன்ற தீர்ப்பு விஷாலுக்கு சாதகமாக அமைந்தது. போலிஸ் நடவடிக்கை தவறானது என நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் விஷால் தலைமையில் இன்று மாலை கூடுகிறது. இதில் சங்கத்துக்கு பூட்டு போட்ட பிரச்சனை பற்றி பேசப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நோட்டீஸ் அனுப்படவுள்ளதாம்.

மேலும் சங்க நிதி, இளையராஜா இசை நிகழ்ச்சி பற்றியும் விவாதிக்கப்படவுள்ளதாம்.