Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் 2.0வை விஜய் தோற்கடித்துவிட்டார்! ஆதாரத்துடன் அடித்து கூறும் பிரபலம்

கடந்த ஆண்டு ரஜினியின் நடிப்பில் 2.0 படம் வெளிவந்தது. ஷங்கர் இயக்கியிருந்த இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூலை குவித்திருந்தது.

ஆனால் இந்த படத்தின் வசூலை தீபாவளிக்கு வெளிவந்த விஜய்யின் சர்கார் தோற்கடித்தவிட்டதாக விஜய்யின் முன்னாள் PROவும் தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், முதலிடத்தை விஜய் பிடித்துவிட்டார். இரண்டாவது இடத்திற்கான போட்டி தான் தற்போது ரஜினி, அஜித்திடம் நடந்து வருகிறது. அதுவும் இந்த பொங்கலுக்கு தெரிந்துவிடும்.

ரஜினியின் 2.0 படம் உலக அளவில் பல கோடிகளில் சாதனை செய்ததாக கூறுகிறார்கள். இருக்கலாம், அது ரஜினியின் இமேஜிற்காகவோ அல்லது லைகாவின் இமேஜிற்காகவோ கூறப்படலாம். ஆனால் தமிழகத்தில் 2.0 படத்தை விஜய்யின் சர்கார் படம் முந்திவிட்டது. இதனை நான் ஆதாரத்துடன் நிரூப்பிக்க தயார் என கூறியுள்ளார்.