Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை இயக்கவில்லை என்றாலும் அவரால் லாபம் நிறைய பார்த்துள்ளேன்- கொண்டாடும் பிரபலம்

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். பொது இடங்களில் இவரை பார்த்தால் அப்படியே சாதாரணமாக இருப்பார், இவ்வளவு ரசிகர்கள் வட்டாரம் வைத்துள்ள இவரா இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியப்படும் படி இருப்பார்.

இவர் தற்போது சர்கார் பட வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஒரு விளையாட்டு மையப்படுத்திய கதையில் நடிக்கிறார், அந்த வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது.

பிரபல இயக்குனர் சுந்தர்.சி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், நீங்கள் இயக்க மிஸ் செய்த நடிகர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்க, அவர் விஜய் தான். அவருக்காக கதை எழுதி கடைசியில் வேறொரு நடிகரை வைத்து இயக்கி ஹிட்டான படங்கள் மட்டும் ஏழு இருக்கும்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து சம்பாதித்த தயாரிப்பாளர்களை விட விஜய்க்காக கதை எழுதி, இயக்கி அதிகமா லாபம் பார்த்த இயக்குனர் நானாக தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.