Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவா அண்ணா இன்னொரு படம் வேண்டும்! தியேட்டரிலேயே சிவாவை நெகிழ வைத்த ரசிகர்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்துடன் நான்காவது முறையாக இணைந்து உருவாக்கிய படம் விஸ்வாசம். இப்படம் கடந்த 10ஆம் தேதி தான் வெளியானது.

இப்படம் வெளியாவதற்கு முன் இந்த கூட்டணியின் மூன்றாவது படமான விவேகத்தின் தோல்வியானலும் விஸ்வாசம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தினாலும் அஜித் அடுத்த படம் சிவாவுடன் இணைய கூடாது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் இந்த விஸ்வாசம் படம் வெளியான பிறகு பல ரசிகர்கள் அஜித் மீண்டும் சிவாவுடனயே படம் பண்ணால் நன்றாக இருக்கும் என கூற ஆரம்பித்துவிட்டனர். இதன் ஒரு வெளிப்பாடாகவே இப்படத்தை சமீபத்தில் திரையரங்கில் வந்து பார்த்த சிவாவிடம், சிவா அண்ணா அஜித்துடன் இன்னொரு படம் வேண்டும் என தல ரசிகர்கள் கத்தும் வீடியோ வெளியாகி பரவசப்படுத்தியுள்ளது.