Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல இறங்கி அடிக்க நினைத்தால் அடித்து விடுவார்! விஸ்வாசத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்

அஜித்தின் விஸ்வாசம் படம் தமிழ் சினிமாவில் புதியதொரு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல விதமான கருத்துகளை தான் கூறிவருகின்றனர்.

அதிலும் சினிமா பிரபலங்களிடம் இருந்து ஏகப்பட்ட கமென்ட்ஸ்கள் வருகின்றன. சக போட்டி படமான பேட்டயின் தயாரிப்பாளரும் விஸ்வாசம் படத்தை பார்க்கும் போட்டோ ஒன்று வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தல அடிச்சி தூக்க நினைத்தால் தூக்கிவிடுவார் என பயங்கரமாக புகழ்ந்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் இவரது காதலி நயன்தாரா தான் இப்படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.